உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அடுத்த நாடாளுமன்ற அமர்வு வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல் தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
59 பார்வைகள்

அடுத்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த நாடாளுமன்ற அமர்வு வாரத்துக்கான அலுவல்கள் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு என்பவற்றை அங்கீகரிப்பதற்கான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப. 5.00 மணிக்கு 5 சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.

பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் இரண்டு (திருத்தச்) சட்டமூலம் (சட்டமூல இலக்கம் 70 மற்றும் 80) தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் 5 சட்ட ரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.

அன்றைய தினம் பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மு.ப. 11.30 மணி முதல் மு.ப. 5.00 மணி வரை விசர்நாய்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிலக்கரி இழப்பையும் டீசல் மானியத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தக் கூடாது.!

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தையும், தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நிர்வாக இழப்பையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது என்று…

74 0 0
இலங்கை செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து.!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் கருவலகஸ்வெவ, மீ ஓயா பாலத்திற்கு அருகில் சொகுசு பேருந்து ஒன்று சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10…

68 0 0
இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் மின்சார விநியோகத் தடை.!

இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விநியோகத்தைச் சீர் செய்வதற்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடும் என இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள்…

51 0 0
இலங்கை செய்திகள்

யாருக்காகவும் சட்டம் வளைக்கப்பட மாட்டாது.!

நாட்டில் நபர்களின் தகுதி அல்லது பதவி நிலைகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாகவும் நியாயமாகவும் செயற்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில்…

51 0 0