நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிர்!
நுவரெலியா மாவட்ட மற்றும் கண்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
நுவரெலியா ஹட்டன், ஹட்டன் கொழுப்பு, ஹட்டன் கண்டி, ஹட்டன் கினிகத்தேன, ஹட்டன் மஸ்கெலியா, ஹட்டன் நோட்டன், ஹட்டன் டயகம, ஹட்டன் பொகவந்தலாவ, ஹட்டன் சாமிமலை, ஹட்டன் டயகம, ஹட்டன் போடைஸ் வழியாக டயகம ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
மேலும் இப் பகுதியில் கன மழை பெய்து வருவதாலும் சாலைகள் வழுக்கும் தன்மை கொண்ட நிலையில் உள்ளதால் வாகனங்கள் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் வாகனங்களை ஓட்டி செல்லும் வாகன சாரதிகள் அதிக பனிமூட்டம் காணப்படும் பகுதியில் வாகனங்களின் மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை ஓட்டி செல்லுமாறு அவர் மேலும் கேட்டு கொண்டு உள்ளார்.

