உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குளத்தில் படகு கவிழ்ந்ததில் தாமரை மலர் பறிக்கச் சென்ற நபர் ப@லி! – இருவருக்கு தீவிர சிகிச்சை

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
55 பார்வைகள்

அனுராதபுரம் – எப்பாவல பகுதியில் உள்ள குளமொன்றில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச் சென்ற மூன்று பேர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெடியாவ குளத்திலேயே நேற்று வியாழக்கிழமை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் எப்பாவல – கட்டியாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தாமரை மலர்களைப் பறிக்கச் சென்றபோது படகு எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்து மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் மூவரையும் மீட்டுத் தம்புள்ளை வீதியில் அமைந்துள்ள எப்பாவல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்தாரா என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை, ஆபத்தான நிலையிலிருந்த ஏனைய இரு நபர்களும் மேலதிக தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

58 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

78 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

80 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

89 0 0