உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரபாகரனின் ஆன்மா சாந்தியடையவே அரசால் பழிவாங்கப்படுகின்றார் மஹிந்த.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
78 பார்வைகள்

பிரபாகரனின் ஆன்மா சாந்தியடைவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷவை அவரது முதிய வயதிலும் தேசிய மக்கள் சக்தி அரசு சித்திரவதை செய்து பழிவாங்குகின்றது. இதனால் தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல்நிலை மோசமாக இல்லை, அவர் குணமடைந்து வருகின்றார். எனினும், மனைவியின் உதவி அவருக்குத் தேவைப்படும் இந்த வேளையில்தான் ஷிராந்தி ராஜபக்ஷவை அரசு சிறையில் அடைத்துள்ளது. மருந்து வழங்குவதற்கேனும் மனைவி அருகில் இருக்க வேண்டும் அல்லவா?

ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்துள்ளனர், அதனால்தான் அவர்களைச் சிறையில் அடைக்கின்றோம் எனக் காண்பிப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவந்த காரணத்தினாலேயே மஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கப்படுகின்றார் என்பதே உண்மையாகும்.

பிரபாகரனின் ஆன்மா சாந்தியடைவதற்காகவே இந்த அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனால் தமிழ் புலம்பெயர் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இருப்பினும், நாட்டுக்காகச் சேவையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ தனது முதிய வயதில் பழிவாங்கப்படுவது குறித்து இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் கவலையில் உள்ளனர்.

மஹிந்தவையும் அவரது பெயரையும் அழிப்பதற்கு இந்த அரசு என்ன செய்தாலும், மக்களின் மனங்களில் மஹிந்தவுக்கு உள்ள அன்பும் மரியாதையும் ஒருபோதும் நீங்காது. அது இருந்ததைவிடவும் அதிகரிக்கும்.

‘மஹிந்த ராஜபக்ஷ என்பவர் இந்நாட்டின் அரசியல் கலாச்சாரம்’ என அநுரகுமார திஸாநாயக்கவே குறிப்பிட்டிருந்தார். அப்படிப்பட்ட தலைவரை முதிய வயதில் சித்திரவதைக்கு உட்படுத்துவது ஏற்புடையது அல்ல. வரலாற்றில் மஹிந்தவின் பெயர் தங்க எழுத்துகளாலேயே எழுதப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0