உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விபத்தில் சிக்கி மௌலவி உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
78 பார்வைகள்

கற்பிட்டி – புத்தளம் பிரதான வீதியில், கண்டக்குடா பள்ளிவாசலுக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் மௌலவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்தவரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான 34 வயதுடைய மௌலவி மின்ஹாஜ் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

இவர் கண்டக்குடாவில் திருமணம் முடித்து, அங்கு வசித்து வந்தவராவார்.

சம்பவத்தன்று கண்டக்குடா பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காகப் பிரதான வீதியைக் கடக்க முற்பட்டவேளை, புத்தளம் பகுதியிலிருந்து வேகமாக வந்த வேன் ஒன்று மௌலவி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் வீதியில் தூக்கி வீசப்பட்ட மௌலவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வேன் ஆனமடுவப் பகுதியைச் சேர்ந்தது என்றும், உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு வருகை தந்திருந்த வேளையிலேயே விபத்து நேர்ந்துள்ளது என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0