உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இனவாதத்தின் மூலம் மீண்டும் அதிகாரத்தைப் பிடிக்க முயற்சி! : மக்கள் சக்தி அமைப்பு குற்றச்சாட்டு!!

69 பார்வைகள்

உலப்பனே சுமங்கல தேரர், கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட சில பிக்குகள் அடங்கிய குழுவினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியலில் செல்வாக்குச் செலுத்த முயற்சிகின்றனர் என்று மக்கள் சக்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரான ஊழல், மோசடிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், இனவாதத்தைத் தூண்டும் பிக்குகள் குழுவொன்று மீண்டும் அரசியல் அரங்கில் தலைதூக்கியுள்ளது. இந்தக் குழுவினரின் கடந்தகாலச் செயற்பாடுகளை மக்கள் நன்கு அறிவார்கள்.

கஸ்ஸப்ப தேரர் என அழைக்கப்படுபவரும் நச்சுத்தனமான இனவாதத்தைப் பரப்பும் வகையில் செயற்படுகின்றார். திருகோணமலையில் புத்தர் சிலை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையைப் பயன்படுத்தி, இனவாத அடிப்படையில் பதற்றத்தை உருவாக்கி, சட்டவிரோதமான முறையில் நிலத்தைக் கைப்பற்றி அங்கு கட்டடம் அமைக்க முயற்சிக்கப்பட்டதை மக்கள் மறந்துவிடவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் மதங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன.

கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், அவருக்கு ஆதரவாக உலப்பனே சுமங்கல தேரர், கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட அதே குழுவைச் சேர்ந்த பிக்குகள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர்.

சமந்தபத்ர தேரர் போன்றவர்களும் பௌத்த மதத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். பௌத்த துறவிகளாக இருப்பவர்கள் மதத்தின் அடிப்படைப் போதனைகளையும் ஒழுக்கத்தையும் பேண வேண்டும். மாறாக, சிலர் பிரபலமடைவதையும் அரசியல் செல்வாக்கைப் பெறுவதையும் முன்னிலைப்படுத்துகின்றனர்.

கலகொட அத்தே ஞானசார தேரர் மாளிகாவத்தைப் பகுதியை ‘காசா’வாக மாற்றினால், தாம் ‘இஸ்ரேலாக’ இருக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். காசா மீது தாக்குதல் நடத்தப்படுவதையும், அங்குள்ள சிறுவர்கள் கொல்லப்படுவதையும் ஆதரிக்கும் வகையிலான கருத்தாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஞானசார தேரர் போன்றவர்கள் சிங்கள பௌத்த இனவாதத்தைத் தூண்டியபோது, மறுபுறத்தில் சஹ்ரான் போன்ற தீவிரவாதிகள் உருவாகும் சூழலும் காணப்பட்டது. இவ்விரு தரப்புகளின் பின்னணியிலும் அரசியல் சக்திகள் இருந்தனவா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அரசியல் சக்திகள், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழியாக இனவாதத்தைத் தூண்டுவதையே தமது இறுதித் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றனர்.

பௌத்த மதத்தின் பெயரைப் பயன்படுத்தி, அதன் அடிப்படை விழுமியங்களை அழித்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி புத்தர் சிலையை முன்னிறுத்துவது முரண்பாடானது. பௌத்த மதத்தைப் பாதுகாக்க விரும்பும் மக்கள் இத்தகைய செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.

இந்த நாட்டுக்கு மீண்டும் இனவாத மோதல்களும் போரும் பயங்கரவாதமும் தேவையில்லை. இந்தப் பிக்குகள் குழுவினரின் பேச்சுகளிலும் நடத்தைகளிலும் காணப்படும் வன்முறைப் போக்குகள் குறித்து மக்கள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். பௌத்த மதத்தைப் பாதுகாப்பது என்பது இனவாதத்தைப் பாதுகாப்பதல்ல. மதத்தின் பெயரால் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.” – என்றார்.
………………………..

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0