உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் ஆபத்தான முறையில் வீதிகளில் வலைகளை உலர வைத்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

67 பார்வைகள்

மன்னார் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கும், வீதிகளில் பயணிப்போருக்கு இடையூறாக மீன் வலைகளை ஆபத்தான முறையில் உலரவிடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது டன், வீதிகளில் காணப்படும் வலைகளும் அகற்றப்பட்டுள்ளன.

மன்னார் ஜீவபுரம், ஜிம் ரோன் நகர், எமில் நகர், சாந்திபுரம் பனங்கட்டு கொட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் சில மீனவர்கள் வீதிகளில் வலைகளை ஆபத்தான முறையில் உலர விடுவதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

குறித்த செயல்பாட்டைக் கைவிடுமாறு நகரசபையால் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, சிலர் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீதிகளில் வலைகளை உலர விடுகின்றனர்.

அதுமட்டுமன்றி, வலைகளை அகற்றுமாறு அறிவுறுத்தும் போது, “வலைகளை உலர விட வேண்டாம் என்றால் வேறு எங்கே உலர விடுவது?” எனக் கேள்வி எழுப்பி, தமது செயல்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், தமது தொழில் தேவைகளைக் காரணம் காட்டி, பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணிப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வீதிகள் அனைவரும் பாதுகாப்பாக பயணிப்பதற்கான பொதுவிடங்களாகும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

இந்நிலையில், வீதிகளில் கிடக்கும் வலைகளில் சிக்கி விழும் சம்பவங்களும் தொடர்ச்சியாக மன்னாரில் பதிவாகி வருகின்றன.

கடந்த வருடம் கர்ப்பிணித் தாய் ஒருவர் வலையில் சிக்கி விழுந்ததாகவும், நேற்று சிறுமி ஒருவரும் வலையில் சிக்கி விபத்துக்குள்ளான தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து, வீதிகளில் மீன் வலைகளை உலர விடுவதை உடனடியாக நிறுத்துமாறு மன்னார் நகர சபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது டன், இனி வரும் காலங்களில் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0