உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காவி உடையில் கை வைத்து தவறிழைத்துள்ளது அநுர அரசு : சஜித் விமர்சனம்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
84 பார்வைகள்

“தற்போது பல்வேறு வழிகளில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே மோதல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மத வேறுபாடு, மதவாதம், இன வேறுபாடு மற்றும் இனவாதம் என்பன ஒரு புற்றுநோயாகும். இந்தப் புற்றுநோயை நாம் குணப்படுத்தி, அனைவரும் ஒன்றிணைந்து வாழக்கூடிய செழிப்பான சூழலை உருவாக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டின் அனைத்து மக்களும் அரசமைப்பை வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும். நமது நாடு ஒற்றையாட்சி, இறையாண்மை கொண்ட ஒரு நாடாகும்.

அரசமைப்பின் மூலம் பௌத்த மதத்துக்கு முதன்மை இடம் வழங்கி, அதனைப் போஷித்து பாதுகாக்கும் அதேவேளையில், ஏனைய சமூகங்கள் தங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துத் தங்களது மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரணசிங்க பிரேமதாஸ புத்தசாசன அமைச்சை உருவாக்கியதுடன், ஏனைய மதங்கள் மற்றும் இனங்களுக்காக இராஜாங்க அமைச்சுகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்கினார். இதுவே நாங்களும் பின்பற்றும் நடுத்தரப் பாதையாகும். ஐக்கிய மக்கள் சக்திக்குள் இனவாதமோ மதவாதமோ கிடையாது.

காவி உடையில் கை வைப்பதற்கோ அல்லது அது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கோ சாதாரண மக்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. மதத் தலைவர்கள், மகாநாயக்க தேரர்கள், ஒழுக்காற்று சபைகள் மற்றும் சங்க சபைகள் மூலமே இவ்வாறான விடயங்கள் கையாளப்பட வேண்டும்.

இந்த அரசு காவி உடையில் கை வைத்து பாரியதொரு தவறைச் செய்துள்ளது. அந்தத் தவறைத் திருத்துவதற்கு அறிக்கையைப் பெற இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 24 மணித்தியாலங்களுக்குள் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் இது தொடர்பாகக் கலந்துரையாட எதிர்க்கட்சி சார்பில் யோசனைகளை முன்வைத்துள்ளோம். காவி உடை மட்டுமன்றி, ஏனைய மதத் தலைவர்களின் உத்தியோகபூர்வ ஆடைகள் குறித்தும் பொதுவான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

இன்று நாட்டில் அரசை மையமாகக் கொண்ட பாரதூரமான அடக்குமுறைக் கொள்கையே காணப்படுகின்றது. எதிர்க்கட்சியை மௌனிக்கச் செய்யும் தர்மத்துக்குப் புறம்பான சர்வாதிகார ஆட்சியொன்றையே அரசு முன்னெடுத்து வருகின்றது. அரசு தனிக் கட்சி ஆட்சியை ஸ்தாபிக்கவே முயற்சிக்கிறது.

அத்துடன், 22ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்துக்கும், நீதித்துறையின் சுயாதீனத்துக்கும் தற்போதைய அரசு மரண அடியைக் கொடுத்துள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0