உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி : 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
56 பார்வைகள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அவ் அலுவலகத்தின் அஸ்வெசும பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இரண்டு அதிகாரிகள் இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த இரு அதிகாரிகளினாலும் பணம் வைப்பு செய்யப்பட்டிருந்த மாவட்ட செயலகத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஒருவர் மற்றும் ஹட்டன் வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் பணி, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நோர்வுட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கணக்காய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சந்தர்ப்பத்தில், அலுவலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள் உட்பட மேலும் பல பிரிவுகளைச் சேர்ந்த 14 ஊழியர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரால் அது குறித்து நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட பின்னர், மாவட்ட செயலாளரால் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு அறியத்தரப்பட்டுள்ளது.

நோர்வுட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள அஸ்வெசும நிதி மோசடி சுமார் 6 கோடி ரூபாயை நெருங்குவதால், இதன் மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0