உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நுகர்வோருக்கு நிவாரணம்; வியாபாரிகளுக்கு புதிய நம்பிக்கை.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
71 பார்வைகள்

இந்நாட்களில் பேலியாகொடை பிரதான மத்திய மீன் சந்தையின் நடவடிக்கைகள் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாய் தெற்கு மாகாணக் கடற்றொழில் மூலமும் அதிகளவிலான மீன், சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதால், அனைத்து வகையான மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதம் வரை குறிப்பிடத்தக்க மட்டத்தில் குறைவடைந்துள்ளன.

இந்தத் திடீர் விலை வீழ்ச்சி நுகர்வோருக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. சத்தான உணவு வேளையொன்றைக் குறைந்த செலவில் தயாரித்துக்கொள்வதற்குத் தமக்குக் கிடைத்த பெரும் நிவாரணம் இது எனத் தெரிவிக்கும் நுகர்வோர், நாளாந்தம் மீன் கொள்வனவு செய்ய சந்தைக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

சந்தையில் பலயா மீன் கிலோ ஒன்று 400 முதல் 650 ரூபாய் வரையிலும், சாலையா மீன் 200 முதல் 450 ரூபாய் வரையிலும், லின்னா மீன் 550 முதல் 700 ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றன. மேலும் ஹுருல்லா, பாறை, கும்பிலாவ, கெலவல்லா மற்றும் தலபத் போன்ற அனைத்து வகையான மீன்களின் விலைகளும் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

வெளிச் சந்தைகள் மற்றும் தூரப் பிரதேச சந்தைகளுடன் ஒப்பிடுகையில், பேலியாகொடை சந்தையில் மீன்களைக் குறைந்த விலையில் பெற முடிவதாக இரத்தினபுரி, அவிசாவளை போன்ற பகுதிகளிலிருந்து வருகை தந்த கொள்வனவாளர்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மறுபுறம், இந்த நிலைமை மீன் வியாபாரிகளுக்கும் புதிய நம்பிக்கையைச் சேர்த்துள்ளது. அதிக விலை காரணமாக முடங்கிப்போயிருந்த தமது வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் உயிர்பெற்றுள்ளதாகக் கூறும் பேலியாகொடை மீன் வியாபாரிகள், சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள், மீன் விலை குறைந்தமையால் நுகர்வோரின் ஈர்ப்பு அதிகரித்துள்ளதுடன், அதன் மூலம் தமது நாளாந்த விற்பனை அளவும் வருமானமும் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

இந்த நியாயமான மற்றும் மலிவான விலை மட்டம் தொடர்ந்தும் நிலைத்திருந்தால் தொழில்துறைக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரும் நிவாரணமாக அமையும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0