உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விவசாயக் கடன் தருவதாகக் கூறி நிதி மோசடி; சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
58 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களை குறிவைத்து நுன் கடன் தருவதாக கூறி முற்பணம் வங்கியில் வைப்பிலிட கூறி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பணம் பெற்றவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்து ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது சந்தேகநபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பணித்துள்ளார்.

சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார தெரிவிக்கையில், மஸ்கெலியா நகரில் உள்ள ஆலய வீதியில் ரன் பிம எக்ரிகல்ச்சர் என்ற ஜெயக்குமார் சுரேந்திரன் ஓல்டீரீம் லிந்துல பகுதியைச் சேர்ந்தவர்.

இவர் பெண்களை குறிவைத்து விவசாய கடன் தருவதாக கூறி சாமிமலை பகுதியில் உள்ள மல்லியப்பு தோட்டத்தில் 10 பெண்களிடம் ஆறு இலட்சத்து இருபது ஆயிரம் ரூபாய் நிதி மோசடி செய்துள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார்கள் பதிவாகியதை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பணித்துள்ளார்.

குறித்த நபர் மீது பத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகி வருகிறது எனவும் அவை பற்றிய விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பெண்களை குறிவைத்து விவசாய கடன் தருவதாக கூறி அவரது அல்லது அவரின் மனைவியின் வங்கி கணக்கில் ஒரு இலட்சம் ரூபாய் நிதியை வைப்பு செய்தால் ஜந்து இலட்சம் விவசாய கடன், ஐம்பதாயிரம் ரூபாய் வைப்பில் இட்டால் மூன்று இலட்சம் ரூபாய் விவசாய கடன் என்ற அடிப்படையில் இருவேறு பகுதியில் நிதி மோசடி செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

ஆகையால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக விழிப்புடன் இருக்குமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0