உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலா தகவல் மையம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
61 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில், மன்னார் பிரதான பாலம் மன்னார் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள வங்காலை பறவைகள் சரணாலய வளாகத்தில் அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் மையம் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்ரன் ஜயக்கொடி தலைமையில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து குறித்த சுற்றுலா தகவல் மையத்தை திறந்து வைத்தனர்.

இதன்போது வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரித்தானிய தூதரக அலுவலர்கள், UNDP நிறுவன அலுவலர்கள் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, கண்டல் தாவரங்கள் உள்ளடங்களாக இயற்கையை சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக அமைக்கப்பட்ட பகுதியையும் குறித்த குழுவினர் நேரடியாக பார்வையிட்டனர்.

குறித்த தகவல் மையம் அமைப்பதற்கான பங்களிப்பினை பிரித்தானிய தூதரகம் மற்றும் UNDP நிறுவனம் போன்றவை வழங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0