உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பேருந்து சேவையின் போது மதுபோதையில் இருந்த நடத்துனர் பணியிடை நீக்கம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
65 பார்வைகள்

பேருந்து சேவையில் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நடத்துநர் ஒருவரை, இது தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை தற்காலிகமாகப் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளதாக, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 12.10.2026 அன்று சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தின் நடத்துநர் யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் இருந்ததாகவும், இதன் காரணமாக பேருந்துச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் சங்கத்துக்கு தெரியப்படுத்திய அதிகார சபை உரிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு பணித்ததற்கு அமைவாக, விசாரணை நிறைவடையும் வரை குறித்த நடத்துநரைப் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன், பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுபவர்கள் பொறுப்புணர்வுடனும் ஒழுக்கத்துடனும் செயற்படுவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

பயணிகளின் பாதுகாப்பையும் போக்குவரத்துச் சேவையின் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்கு சாரதிகளும் நடத்துநர்களும் தமது கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும். சேவையின்போது இடம்பெறும் இத்தகைய ஒழுங்கீனங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பேருந்துச் சேவைகள் தொடர்பான குறைபாடுகள், சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் ஒழுங்கீனமான செயற்பாடுகள், பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் உள்ளிட்ட முறைப்பாடுகளைப் பொதுமக்கள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முறைப்பாட்டு வாட்ஸ்அப் இலக்கமான 071 9090900 ஊடாகத் தெரிவிக்கலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0