உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குண்டு வைப்பதும் துப்பாக்கியால் சுடுவதும் பயங்கரவாத செயல்களே.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
74 பார்வைகள்

“குண்டு வைத்து கொல்வதற்கும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவை இரண்டும் பயங்கரவாத செயல்களே ஆகும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கதிர்காமம் மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை மீதான தாக்குதல்களின் போது பாதுகாப்பாளர்களின் துப்பாக்கிகள் பறிக்கப்பட்டு, அந்தப் புனித பூமிகள் இரத்த ஆறாக மாற்றப்பட்டன.

தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்திய மகாநாயக்க தேரருக்கும் தியவதன நிலமேவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

37 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அக்காலத்தில் உண்மையான பயங்கரவாதிகளாகச் செயற்பட்டவர்கள் யார் என்பது தற்போது நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

1980களின் பிற்பகுதியில் அரசியல் கொலைகள் மற்றும் வன்முறைகள் மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு, அரசியல் தலைவர்களும் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். வீடுகளும் பொதுச் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு, அவ்வாறே தாக்குதலும் நடத்தப்பட்டது. 1971 மற்றும் 1987 – 89 காலப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் தீவிரவாதச் செயற்பாடுகளே. இதன் மூலம் நாட்டின் அமைதி முற்றாகச் சீர்குலைக்கப்பட்டது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0