உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாட்டில் ஆண்களுக்கு இடையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
86 பார்வைகள்

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது எச்.ஐ.வி தொற்றாளராக ஒரு பெண் அடையாளங்காணப்படும் போது, ஏழு ஆண்கள் தொற்றாளர்களாக அடையாளங்காணப்படும் போக்குக் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இன்று (14) சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாலியல் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி மருத்துவத் துறையின் தற்போதைய போக்குகள், நோய் தடுப்பு முறைகள் மற்றும் எதிர்கால புதிய கண்டுபிடிப்புகள் குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை பாலியல் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி மருத்துவத் துறை விசேட வைத்திய நிபுணர்கள் கல்லூரியின் (SLCoSHH) தலைவியான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய, இலங்கையில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையேயே எச்.ஐ.வி தொற்று அதிகமாகப் பதிவாவதாகச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், போதைப்பொருட்களை ஊசி மூலம் செலுத்துவதனாலும் எச்.ஐ.வி தொற்று பதிவாவதாகவும், நோய் பரவலில் இது அவதானம் செலுத்தப்பட வேண்டிய ஒரு ஆபத்தான நிலைமை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0