உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்குக்கு வருகை தந்த இலங்கைக்கான முதலாவது கியூபத் தூதுவர்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
66 பார்வைகள்

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் மேன்மை தங்கிய பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கியூபத் தூதுவர், வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.

இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துடனான கியூபாவின் உறவுகளை வளர்ப்பதற்கான புதிய வாசலைத் திறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், கியூபாவின் முக்கிய தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் மேன்மைதங்கிய திருமதி பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (14.10.2026) புதன்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், பிடல் காஸ்ட்ரோ மற்றும் கியூபா தொடர்பில் தாம் பல விடயங்களை அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், முதல் தடவையாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள தூதுவரை வடக்கு மாகாண மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளங்கள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0