யாழ்ப்பாணத்தில் கடும் மின்னல் தாக்கம்!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, அம்மன் கிழக்கு பகுதியில் இரவு தாக்கிய மின்னல் காரணமாக பலர் பாதிப்படைந்துள்ளனர்.
கடுமையான மின்னல் தாக்கத்திற்கு உள்ளான மயில்வாகனம் ஜெயந்திமலர் என்கின்ற 50 வயதுடைய பெண்மணியே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
அத்துடன் பலர் சிறிய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பலரது மின்னியல் சாதனங்கள் இடி மின்னல் தாக்கம் காரணமாக சேதமடைந்துள்ளன.

