உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆளுங்கட்சிக்குள் மோதல்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
108 பார்வைகள்

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்கும் விவகாரத்தில், அரசின் முக்கிய தரப்பினருக்கு இடையிலேயே பெரும் குழப்பமும் காரசாரமான விவாதங்களும் ஏற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்புகையில், “விளையாட்டரங்கு அமைக்கும் பணிகள் தற்போது எந்தக் கட்டத்தில் உள்ளன? இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்று வினவினார்.

இதன்போது குறுக்கிட்ட ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாரும் எதிர்பாராத வகையில், “இந்த விளையாட்டரங்கை அமைப்பதற்கான இடத்தை யார் தெரிவு செய்தது? இதற்கான அனுமதியை வழங்கியது யார்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

இதனைச் சற்றும் எதிர்பாராத அமைச்சர் இ.சந்திரசேகர், “விளங்காமல் பேசக் கூடாது… கொஞ்சம் இருங்கள் தம்பி, நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று உரத்த தொனியில் கண்டிக்கும் வகையில் பேசினார்.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.அர்ச்சுனா, க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் ஆகிய மூவரும் மாறி மாறி குறுக்கிட்டு, முறையான அனுமதிகள் பெறப்பட்டதா என்றும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்ன என்றும் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பினர்.

இந்த உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்காக ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டிருந்த போதிலும், நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இவ்வாறான பின்னணியில், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகள் இந்தக் கூட்டத்தின் ஊடாக பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

எனினும், இந்த விவகாரம் குறித்துத் தொடர்ந்து பேசுவதைத் தவிர்த்த அமைச்சர் இ.சந்திரசேகர், அடுத்தடுத்த நிகழ்ச்சி நிரல்களை எடுத்து கூட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0