உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜன் விவகாரம்; ஒரு நாடாக நாம் பெற்ற முதல் வெற்றி.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
67 பார்வைகள்

சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான பொறியியலாளர் சிவராசா அனோஜனின் மரணதண்டனையை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் இரத்துச் செய்திருப்பது முழு நாட்டுக்கும் நிம்மதியளிக்கின்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அனோஜனின் மரணதண்டனையை இரத்துச் செய்து நெகிழ்வுப்போக்கை வெளிப்படுத்திய சவுதி அரேபிய அரசுக்கும், அந்த நாட்டின் இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆட்சியில் உள்ள அரசு என்ற ரீதியில் இலங்கை அரசு இந்த விடயத்தில் தனது பொறுப்பை மிகச் சரியாக நிறைவேற்றியுள்ளது.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், பொதுமக்களும் நம்பிக்கை மற்றும் பிரார்த்தனையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட்டனர். ஒரு நாடு என்ற வகையில் இது நாம் அனைவரும் இணைந்து பெற்ற முதல் வெற்றி.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0