உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
63 பார்வைகள்

திருகோணமலை – மாவிலாறு காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஈச்சிலம்பற்று – பூநகர் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய இராசரத்தினம் நாகேந்திரம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் மாவிலாறு காட்டுப்பகுதியில் மாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று புதன்கிழமை (14) காலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ. நூருல்லா சடலத்தைப் பார்வையிட்டு மரண விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0