உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி” இறுதிப் போட்டியில் யாழைச் சேர்ந்த இருவர் பங்கேற்பு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
77 பார்வைகள்

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பார்வையற்றோருக்கான தேசிய பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி – 2026” இறுதிப் போட்டி நாளை (15.10.2026) பத்தரமுல்லை, சுஹுருபாயா கட்டடத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.

சமூக சேவைகள் திணைக்களத்தின் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 10 போட்டியாளர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த திரு. குலேந்திரன் ஜெகதீசன் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவை சேர்ந்த றெஜிரொபின்சன் கீர்த்தனா ஆகியோர் அடங்குகின்றனர்.

இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக கொழும்பு செல்லவுள்ள இருவரும் இன்றைய தினம் (14.10.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றபோது, இப்போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அரசாங்க அதிபர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி மற்றும் மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.உமாசங்கர் யாழ்ப்பாண பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ற.தர்மினி ஆகியோர் உடனிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0