உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிப்பு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
74 பார்வைகள்

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சந்தேகநபருக்கு எதிராகப் சர்வதேச பொலிஸாரின் ‘சிவப்பு எச்சரிக்கை’ அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு, சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பிடியாணை பிறப்பிப்பதாகவும் நீதிவான் குறிப்பிட்டார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்குச் சொந்தமான நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பிலேயே இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தினர்.

சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் உத்தியோகபூர்வ அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய குறித்த நிதி, அதற்குப் பயன்படுத்தப்படாமல், ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக 12,000 ரி-ஷர்ட்டுகளை கொள்வனவு செய்யப் பயன்படுத்தப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னர் இது தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டிருந்தது.

புலனாய்வுத் துறையினரின் வாதங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு கோட்டை நீதவான், பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும், இன்டர்போல் பொலிஸார் ஊடாகச் சந்தேகநபரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கட்டளையிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0