உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமெரிக்க கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: ஒருவர் ப@லி!

உலக செய்திகள் 3 நாட்கள் முன்
67 பார்வைகள்

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள ‘சிக்ஸ் ஃப்ளக்ஸ் ஓவர் ஜோர்ஜியா’ (Six Flags Over Georgia) கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அட்லாண்டாவிலிருந்து சுமார் 15 மைல் தொலைவில் உள்ள இந்தப் பூங்காவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து கோப் கவுண்டி (Cobb County) காவல் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எந்த சவாரி (Ride) விபத்துக்குள்ளானது என்று காவல் துறை உடனடியாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், செய்தி நிறுவனங்களின் வான்வழிப் படங்களில் ‘கோலியாத்’ (Goliath) ரோலர் கோஸ்டர் நடுவழியில் நிறுத்தப்பட்டிருப்பதும், ஊழியர்களின் உதவியுடன் சவாரி செய்தவர்கள் கீழே இறக்கிவிடப்படுவதும் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் மரணத்துக்கான காரணம் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

எனினும், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உள்ளூர் ஊடகங்களிடம் கூறுகையில், சவாரியின் போது ஒருவர் இருக்கையிலிருந்து தூக்கி எறியப்பட்டதாகத் தெரிவித்தனர்.

அந்த நபர் இருக்கையிலிருந்து நழுவி, ரோலர் கோஸ்டரிலும் மற்ற பயணிகளிலும் மோதிவிட்டு, அருகில் இருந்த கட்டடமொன்றின் மீது விழுந்ததாக 11 அலைவ் (11 Alive) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் ரோலர் கோஸ்டர் இயக்கத்தில் இருந்தபோது தானாகவே எடுக்கப்பட்ட நினைவுச் சின்னப் புகைப்படங்களில் (Souvenir Photos) பதிவாகியுள்ளதாகவும் சாட்சிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள சிக்ஸ் ஃப்ளாக்ஸ் நிர்வாகம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

மேலும், அவசர காலக் குழுவினரும் உள்ளூர் அதிகாரிகளும் உடனடியாகச் செயல்பட்டு விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகப் பூங்கா பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களது மற்ற பூங்காக்களிலும் இதே போன்ற ஒத்த சவாரி அமைப்புகளைத் தற்காலிகமாக மூடுவதாக சிக்ஸ் ஃப்ளாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுவாயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் தகவல்!

அதிக அளவிலான அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைத்தல் அல்லது முழுமையாக அகற்றுதல் (Denuclearization) தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி…

73 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 3 சிறுவர்கள் உட்பட நால்வர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர். வியாழக்கிழமை…

77 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல் : விலை உயர்ந்த பொருட்களைத் தேடி படை எடுக்கும் பொதுமக்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள்,…

74 0 0
உலக செய்திகள்

யேமனின் ஜனாதிபதி மாளிகை மீது வான்வழித் தாக்குதல்: 5 பேர் உயி@ரிழப்பு!

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்…

75 0 0