உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீட்டில் தனிமையில் இருந்த இளம் யுவதி உ**யிரிழந்த நிலையில் மீட்பு!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
64 பார்வைகள்

அனுராதபுரம், நொச்சியாகம பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலையில் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த பெற்றோர் மதியம் வீடு திரும்பிய வேளையில், வீட்டின் அறையொன்றில் மேற்படி யுவதி உயிரிழந்த நிலையில் காணப்பட்டமையையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் யுவதியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

யுவதி சடலமாகக் காணப்பட்ட அறையிலிருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டமையால், அவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பெற்றோருடன் ஏற்பட்ட குடும்ப வாய்த்தர்க்கம் காரணமாக, கடந்த சில நாட்களாக மேற்படி யுவதி பெற்றோருடன் பேசாமல் இருந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0