உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ தொடர்பான ஆரம்ப கட்ட மீளாய்வுக் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
59 பார்வைகள்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “Life City” 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின் கீழ், கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தினூடான “கல்முனை – காரைதீவு நகராக்கம்” எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் தொடர்பான முக்கிய ஆரம்ப கட்ட மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (12) கல்முனை மாநகர சபைக் கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) ஏற்பாட்டில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டுப் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு திட்டத்தின் நோக்கம் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து விரிவான உரையாடல்களை மேற்கொண்டனர்.

“Life City” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த “கல்முனை – காரைதீவு நகராக்கம்” திட்டமானது, பெரியநீலாவனை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு கிழக்கிலங்கையின் முக்கிய வர்த்தக மற்றும் வாழ்விடப் பகுதிகளான பின்வரும் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, நகரக் கட்டமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்த தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

இத்திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் கல்முனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கரையோரப் பிராந்தியங்களின் பொருளாதார, வர்த்தக மற்றும் போக்குவரத்துத் துறைகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0