உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
62 பார்வைகள்

மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். இன்று மாகாண மட்டத்தில் சாதிக்கும் நீங்கள், நாளை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களிலும் சாதனை படைக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்று (13.10.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்வுக்கு வருகைதந்த விருந்தினர்கள், மாற்றுத்திறனாளிகளின் இசைக்குழு அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், தேசியக் கொடி, மாகாணக் கொடி மற்றும் மாவட்டக் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, சத்தியப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.

கடந்த 9ஆம் திகதியும் இன்றைய தினமும் இணைந்து மொத்தம் 157 வகையான போட்டிகள் நடைபெற்றன. இன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்களை ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் வழங்கிக் கௌரவித்தனர்.

ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு எமது மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாண்டு இரண்டாவது ஆண்டாக இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை உங்களுக்காக ஏற்பாடு செய்வது எமது கடமையாகும்.

இப்போட்டிகளில் நீங்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றதை அவதானிக்க முடிந்தது. உங்களுடைய திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். இன்று மாகாண மட்டப் போட்டிகளில் பங்கேற்றுள்ள நீங்கள், நாளை தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிகளைப் பதிவு செய்யும் வகையில் உங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

உங்களுடைய திறமைகளை மேம்படுத்துவதற்கும், உங்களின் சாதனைப் பயணத்துக்கும் தேவையான உதவிகளை வழங்க மாகாண நிர்வாகம் தயாராக இருக்கின்றது என்றார்.

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர், வடக்கு மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0