செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி வினோத உடை அணிந்த சிறுவன்; பெற்றோர், ஆசிரியர்களுக்கு பொலிஸார் அழைப்பு.!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கில் உள்ள சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழாவில், செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி வினோத உடை அணிந்த சிறுவன் பார்வையாளர்களையும் விருந்தினர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
குறித்த சிறுவன், செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் வாசகங்கள் எழுதப்பட்ட உடையை அணிந்து, தனது மழலை மொழியில் நீதி கோரியமை பலரையும் கண்கலங்கச் செய்துள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுவனின் பெற்றோர் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் இன்று காலை 10.30 மணிக்கு மருதங்கேணி பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

