நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்.!
2027ஆம் ஆண்டுக்கான நுவரெலியா பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்ட நடவடிக்கை நிறைவேற்றுவதற்கான கூட்டம் இன்று (13) காலை 10 மணிக்கு நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த வரவு செலவுத் திட்ட அறிவிப்பு கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 6 உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்கள், ஒருவர் சுகயீனம் காரணமாக சமூகமளிக்கவில்லை) ஐக்கிய மக்கள் சக்தி 5 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி 1 உறுப்பினர், பொதுஜன பெரமுன 1 உறுப்பினர், சுயாதீனமாக 2 உறுப்பினர்கள், மக்கள் போராட்ட முன்னணி 1 உறுப்பினர், மொத்தமாக அவை தலைவரரோடு 22 உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஆதரவாக அவை தலைவர் உட்பட 21 உறுப்பினர்களும் 2 உறுப்பினர் சமூகமளிக்கவில்லை.
அந்தவகையில் 21 வாக்குகளால் நுவரெலியா பிரதேச சபையில் வரவு செலவுத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


