உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்று போராட்டம்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
62 பார்வைகள்

அரச பயங்கரவாதம் இனியும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யக் கோரியும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (PSTA) உடனடியாகக் கைவிடுமாறு வலியுறுத்தியும் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை கண்டனப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலங்காலமாகப் பயன்பாட்டிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முற்றாக இரத்துச் செய்ய வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைக் (PSTA) கைவிடுமாறும் இந்தப் போராட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

அனைத்துவிதமான அரச அடக்குமுறைச் சட்டங்களுக்கும் எதிராகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தை முன்னிட்டு அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0