உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்தத் திட்டம்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
74 பார்வைகள்

நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்துத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற விசேட செயற்குழுவுக்குப் பல முக்கிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் எனச் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்தப் பரிந்துரைகளுக்கு இணையாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தனது யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நீண்டகாலமாக மாகாண சபைகள் இயங்கி வருகின்றமை ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்பதால், நாடாளுமன்றச் செயற்குழு விரைந்து ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்தி செய்யப்படாமையால், எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதில் சட்டச் சிக்கல் நிலவுகின்றது. எனவே, இது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளதுடன், நாடாளுமன்றத்தின் தீர்மானத்துக்குப் பின்னரே ஆணைக்குழு உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும்.

பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பாகச் செயற்குழு முன்வைத்துள்ள விடயங்களைக் கருத்திற் கொண்டு அதற்குரிய பரிந்துரைகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானங்களை எட்டும் நோக்கில், எதிர்வரும் நாட்களில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0