உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தவெக கூட்டணியில் பாமக இணைந்தால், விசிக வெளியேறும் : அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!

இந்திய செய்திகள் 4 நாட்கள் முன்
91 பார்வைகள்

தவெக கூட்டணியில் பாமக இணைந்தால், விசிக வெளியேறும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். திருமாவளவனின் தலைமையில் நடந்த கூட்டத்தில், சாதி ஒழிப்பு மற்றும் தமிழ்த் தேசியம் குறித்து விசிக உறுதியாக செயல்படும் இயக்கமாக இருப்பதை வலியுறுத்தினார்.

திண்டிவனத்தில் விசிக சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் வன்னியரசு, எம்.பி ரவிக்குமார், விசிக மாநில பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் பாமக குறித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மதுராந்தகம் இடைதேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக தெரிவித்தது.

அதனால் எங்களால் தான் தவெக வெற்றி பெற்றதாக தெரிவிக்கிறார்கள். பாஜக, பாமக இருக்கிற கூட்டணியில் விசிக இருக்காது என திரும்ப திரும்ப சொல்லி வருகிறோம். இதனை சொல்லுவதன் மூலம் பாமகவிற்கு நல்லது நடக்கிறது.

வன்னியர்கள் பாமக கூட்டணிக்கு வாக்களிக்க ஒன்று சேர்க்க பாமவிற்கு உதவுதாகவும், பாமக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றபோது ஆதிதிராவிட வாக்குகள் தான் காரணம் என பாமக வைத்தியர் ராமதாஸ் தன்னிடம் கூறினார். நாடக காதல் திருமணங்கள் திருமாவளவனால் தான் நடைபெறுகிறது என பாமக 38 மாவட்டங்களிலும் கூட்டம் போட்டு ராமதாஸ் தெரிவித்தார்.

இந்த சூழலில் மேடையில் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு,

“சாதியவாத மதவாத பாஜக, பாமகவுடன் கூட்டணி இல்லை. தவெக கூட்டணியில் பாமக வந்தால் விசிக வெளியேறும். எங்களுக்கு அமைச்சர் பதவி முக்கியமில்லை. திருமாவளவன்தான் முக்கியம்.

பதவி இன்று வரும் நாளை போகும். ஆனால், கட்சிதான் முக்கியம். தமிழ்த் தேசியத்தை வைத்து சிலர் பிழைப்பு வாதம் செய்கிறார்கள். சாதி ஒழிப்புதான் தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியம்தான் உயிர் மூச்சு என முழங்கும் விசிக, விடுதலைக்காக இயங்கும் இயக்கம்” என பேசினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மழை வேண்டி பக்தர்களுடன் மண் சோறு சாப்பிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, நிலத்தடி…

81 0 0
இந்திய செய்திகள்

மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என எச்சரித்தேன்! : திருமாவளவன் ஆதங்கம்!!

தேர்தலில், மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்று சேகர்பாபுவிடம் அப்போதே சொன்னேன் என தொல். திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான…

86 0 0
இந்திய செய்திகள்

கோவையில் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தின் கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று(16) திறந்துவைக்கிறாா். கோவை காந்திபுரம்…

66 0 0
இந்திய செய்திகள்

கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!

ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏயர் இந்தியா சர்வதேச விமானம், கடத்தல் முயற்சி குறித்த சந்தேகத்தால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, நேற்று காலை ஜெய்ப்பூர் சர்வதேச விமான…

73 0 0