உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் அசோக் அபேசிங்க விலகல்!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
86 பார்வைகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் குருணாகல் தேர்தல் தொகுதிக்கான முதன்மை அமைப்பாளர் பதவியில் இருந்தும், அந்த கட்சியில் தான் வகித்த ஏனைய அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு அனுப்பியுள்ள கடிதம் ஊடாகவே அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

அதன்படி, குருணாகல் தேர்தல் தொகுதியின் முதன்மை அமைப்பாளர் பதவியிலிருந்து மட்டுமல்லாது, துணைப் பொதுச்செயலாளர், சமகி தொழிலாளர் சங்கத்தின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவரின் தொழிற்சங்க ஒருங்கிணைப்புச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்தும் விலகுவதாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து அதில் இணைந்து செயற்பட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளின் வெற்றிக்கும், கட்சியை வெற்றிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0