உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாளைய தலைவர்களை உருவாக்கும் ‘NEXTGEN LEADERS’ நிகழ்வு!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
83 பார்வைகள்

மாணவர்களின் ஆளுமைத் திறன்களை மேம்படுத்தி, தலைமைத்துவப் பண்புகளையும் நேர்மறையான மனப்பான்மையையும் வளர்த்து, பொறுப்புமிக்க எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் நோக்கில், ‘CLEAN SRI LANKA’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ‘NEXTGEN LEADERS’ சிறப்பு ஆளுமை மற்றும் மனப்பான்மை அபிவிருத்தி நிகழ்வு நேற்று (12) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். நௌபர்டீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு!

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மாணவர்களின் ஆளுமை விருத்தி, தலைமைத்துவ ஆற்றல், நேர்மறையான சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இச்செயற்திட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ். சுதர்சன், ஏ. நசீர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரீ. உதயகுமார் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், ஆலையடிவேம்பு பிரதேச ‘CLEAN SRI LANKA’ திட்டப் பொறுப்பாளர், வளவாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு வலுச்சேர்க்கும் முன்னெடுப்பு!

திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமாரின் முயற்சி மற்றும் வழிகாட்டலின் கீழ், மாணவர்களின் நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, Attitude and Personality Development Programme எனப்படும் மனப்பான்மை மற்றும் ஆளுமை அபிவிருத்திச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணர்ந்து, அவர்களைத் திறமையான, தன்னம்பிக்கை மிக்க, பொறுப்புணர்வுள்ள எதிர்காலத் தலைவர்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இத்தகைய முயற்சிகள் கல்விச் சமூகத்தினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

திருக்கோவில் கல்வி வலயத்தில் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கும் தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டங்களுக்குக் கல்விச் சமூகத்தினர் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0