உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மஹிந்த கஹந்தகமவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
88 பார்வைகள்

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது.

விசாரணையாளர்களால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கஹந்தகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் அவர் தொடர்புபட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில், கடந்த 6 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் தொகையொன்றும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களுடன் கஹந்தகம துபாயில் நடைபெற்ற விருந்தொன்றில் கலந்துகொண்டதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0