உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தனக்கு தமிழ் மீதுள்ள அன்பை விபரித்த இந்திய பிரதமர் மோடி

இந்திய செய்திகள் 5 நாட்கள் முன்
90 பார்வைகள்

தமிழகம்- சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பாடசாலை ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி மற்றும் மகாகவி பாரதியார் குறித்துப் பெருமிதத்துடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பேசுகையில், “பயணம் மேற்கொள்வதன் மூலம் தமிழ் மொழி மீதான என் அன்பு மேலும் மேலும் எனக்குப் பெருகியது.

இந்தியாவை அதிகமாகச் சுற்றிப் பாருங்கள்.

இந்தியாவில் எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரம், கவிதை, மரபுகளைச் சுமந்து செல்லுங்கள், இந்தியா முழுவதும் இருப்பவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்” என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ் இலக்கியத்தின் மகத்தான ஆளுமை மகாகவி பாரதியார் எனக் குறிப்பிட்டார்.

பாரதியாரின் ‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்ற கவிதை வரியை மேற்கோள் காட்டிய அவர், “பாரதி சொன்னபடி அனைவரும் அச்சமின்றி வாழுங்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், தான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், காசியில் வாழும் மக்கள் மகாகவி பாரதியாரை இன்றளவும் நினைவுகூர்கின்றனர் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மழை வேண்டி பக்தர்களுடன் மண் சோறு சாப்பிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, நிலத்தடி…

81 0 0
இந்திய செய்திகள்

மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என எச்சரித்தேன்! : திருமாவளவன் ஆதங்கம்!!

தேர்தலில், மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்று சேகர்பாபுவிடம் அப்போதே சொன்னேன் என தொல். திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான…

86 0 0
இந்திய செய்திகள்

கோவையில் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தின் கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று(16) திறந்துவைக்கிறாா். கோவை காந்திபுரம்…

66 0 0
இந்திய செய்திகள்

கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!

ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏயர் இந்தியா சர்வதேச விமானம், கடத்தல் முயற்சி குறித்த சந்தேகத்தால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, நேற்று காலை ஜெய்ப்பூர் சர்வதேச விமான…

73 0 0