உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

டெல்லியில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

இந்திய செய்திகள் 4 வாரங்கள் முன்
91 பார்வைகள்

தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் அதிகாரியின் இராஜினாமாவை வலியுறுத்தியும் உயர் நீதிமன்றத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தப் போராட்டத்தில் இணையுமாறு நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, இன்று காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை குறிப்பிட்ட சில மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் மூடப்பட்டிருக்கும். மண்டி ஹவுஸ் (Mandi House) அருகிலுள்ள பரகம்பா சாலையில் (Barakhamba Road) பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி காவல்துறையினருடன், விரைவு நடவடிக்கைப் படை (RAF) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, பல மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

இவை படேல் சௌக், ஜன்பத், ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட் மற்றும் பரகம்பா சாலை ஆகிய நிலையங்களாகும்.

ஞாயிற்றுக்கிழமையன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தப் போராட்டப் பேரணியில் இணையுமாறு ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, ​​மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது டெல்லி காவல்துறையினரும் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, ஒக்டோபர் 12 அன்று ‘இந்தியா’ கூட்டணி மீண்டும் வீதிக்கு வந்து போராடும் என்று அறிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சென்னையில் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரிக்க சிறப்பு ஏற்பாடு

சென்னையில் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 பைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம்…

90 0 0
இந்திய செய்திகள்

மூடர்களின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பில்லை! : பொலிஸாருக்கும் பாதுகாப்பில்லை!

இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். இந்த சோப்ளாங்கி…

98 0 0
இந்திய செய்திகள்

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: குடும்பத்துடன் கிரீஸ் புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குடும்பத்தினருடன் கிரீஸ்…

84 0 0
இந்திய செய்திகள்

இந்துக் குருமார் ஒன்றியத்தின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தீபாவளி என்பது இந்துக்களின் பாரம்பரியத்திலும் ஆன்மிக வாழ்வியலிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள மகத்துவம் மிக்க திருநாளாகும். இருளை அகற்றி ஒளியை ஏற்றுகின்ற இத்திருநாள், வெறுமனே ஒரு கொண்டாட்ட…

70 0 0