உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கறுப்பு ஜூலைக் கலவர இழப்புகள், பாதிப்புகளுக்கு மன்னிப்புக்கோரல் மட்டுமா? – பொறுப்புக்கூறல் எங்கே?

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
71 பார்வைகள்

“தமிழர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜூலை இனவன்முறை தொடர்பான செயல்முறை வெறும் மன்னிப்பு கோருதலோடு நின்றுவிடக் கூடாது. பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்கான ஒரு பொறிமுறை இருக்க வேண்டும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

1983 ஜூலை மாதம் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இன வன்முறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மன்னிப்புக் கோரியமை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“இது ஒரு வரவேற்கத்தக்க நகர்வு.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 2001 ஆம் ஆண்டில் இந்த வன்முறைகள் குறித்து விசாரிக்க ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.

2004 ஆம் ஆண்டில் இலங்கை அரசின் சார்பில் அவர் மன்னிப்பு கோரியிருந்தார். பலர் இதை மறந்துவிட்டார்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, அதன் பல பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்தச் செயல்முறை வெறும் மன்னிப்பு கோருதலோடு நின்றுவிடக் கூடாது. பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்கான ஒரு பொறிமுறை இருக்க வேண்டும்.

பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட்டு, பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட்டால் அதை நாங்கள் வரவேற்போம்.

அதேவேளை, ராஜபக்‌ஷ குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இது ஊழல் தொடர்பான விவகாரம் என்பதால், முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இந்த விசாரணைகளை நாங்கள் வரவேற்கிறோம், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.” – என்று வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0