உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பௌத்த தேரர்களின் பாதயாத்திரை மக்கள் போராட்டமாக மாறும் அபாயம்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
94 பார்வைகள்

ஞானசார தேரரின் காவி உடையை அகற்றிய நடவடிக்கை இனவாதத்தைத் தூண்டும் செயலாகும் என்றும், அரசு உடனடியாகப் பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் பௌத்த தேரர்களின் பாதயாத்திரை அரசுக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறும் அபாயம் நிலவுகின்றது என்றும் முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதிமன்றத் தண்டனைக்குள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பெரும்பான்மை பௌத்த மக்களின் மனங்களைப் புண்படுத்தியுள்ளது.

ஞானசார தேரர் இதற்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அவரின் காவி உடை களையப்படவில்லை. ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் சிறைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த முறை மட்டும் காவி உடை நீக்கப்பட்டிருப்பது எவ்வாறு சாத்தியமாகும்?

ஆட்சிக்கு வரும்போது இனவாதத்துக்கு இடமளிப்பதில்லை எனக் கூறிய அரசு, பௌத்த துறவியின் காவி உடையை அகற்றி சிங்கள பௌத்த மக்களை இனவாதத்தின்பால் தூண்டியுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடையை வழங்கிக் கௌரவிக்குமாறு வலியுறுத்தியும் பிக்குகள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அரசு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், இது மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டமாக வெடிக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0