கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!
வீரக்கெட்டிய, கிஞ்சிகுன பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் ஆறு துப்பாக்கித் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கிஞ்சிகுன, மெடமுலன பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, வீரக்கெட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வீரக்கெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

