உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாப்பரசர் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை!

உலக செய்திகள் 5 நாட்கள் முன்
73 பார்வைகள்

பரிசுத்த பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கண்டறியப்பட்ட சிறிய கட்டியை அகற்றுவதற்காக, எதிர்வரும் நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

ரோமில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டின்போது உரையாற்றிய பரிசுத்த பாப்பரசர் லியோ, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின்போது தனது நுரையீரலில் ஆரம்பக் கட்டத்தில் உள்ள சிறிய கட்டி கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார்.

மருத்துவக் குழுவின் பரிந்துரைக்கு இணங்க, குறித்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தான் சம்மதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வத்திக்கானின் பேச்சாளர் மேட்டியோ புரூனி தெரிவிக்கையில், எதிர்வரும் வாரத்தின் ஆரம்பத்தில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன்பின்னர் பரிசுத்த பாப்பரசர் லியோ குணமடைவதற்கு சுமார் ஒரு வார காலம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த அறுவை சிகிச்சை ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.

1981ஆம் ஆண்டு இரண்டாம் பாப்பரசர் ஜான் பால் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, போப்பாண்டவர்களின் பயன்பாட்டுக்காக இந்த மருத்துவமனையில் பிரத்தியேக சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டது.

அந்தப் பிரிவு இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.

இதற்கிடையில், எதிர்வரும் நவம்பர் மாதம் உருகுவே, ஆர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தனது பயணம், அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படியே நடைபெறும் என்றும் பரிசுத்த பாப்பரசர் லியோ தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுவாயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் தகவல்!

அதிக அளவிலான அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைத்தல் அல்லது முழுமையாக அகற்றுதல் (Denuclearization) தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி…

73 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 3 சிறுவர்கள் உட்பட நால்வர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர். வியாழக்கிழமை…

77 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல் : விலை உயர்ந்த பொருட்களைத் தேடி படை எடுக்கும் பொதுமக்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள்,…

74 0 0
உலக செய்திகள்

யேமனின் ஜனாதிபதி மாளிகை மீது வான்வழித் தாக்குதல்: 5 பேர் உயி@ரிழப்பு!

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்…

75 0 0