உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசியல் களத்தில் நடிகர் தனுஷ்?

சினிமா 2 மாதங்கள் முன்
119 பார்வைகள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார்.

விஜய்யின் இந்த அரசியல் பிரவேசத்தைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகள் பரவலாகக் காணப்படுகின்றன.

அந்த வகையில், நடிகர் தனுஷ் தனது ரசிகர் நற்பணி மன்றத்தை மாவட்ட மற்றும் தொகுதி வாரியாகப் பிரித்து, புதிய நிர்வாகிகளை நியமித்து உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், அவர் தனது கட்சிக்கு ‘தமிழக எழுச்சிக் கழகம்’ எனப் பெயரிட்டுத் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் ரீதியாகத் தனது நிலைப்பாட்டை விரைவில் வெளியிடவுள்ள தனுஷ், கட்சியின் கொடி, கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ரஜினிகாந்தின் ஆதரவுடன் அவர் 2031 சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

விக்னேஷ் சிவன் முன்னிலையில் புன்னகைத்துக் கொண்ட சிம்பு – நயன்தாரா: வைரலாகும் நிழற்படங்கள்

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று…

144 0 0
சினிமா

“மஞ்சணத்தி எனக்கு மிகவும் சிறப்பான திரைப்படம்” – நடிகை பிரியங்கா மோகன் நெகிழ்ச்சி

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ திரைப்படம் தனக்கு மிகவும் சிறப்பானது என நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.  தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த…

140 0 0
சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

170 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

152 0 0