உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
25 பார்வைகள்

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். இந்த வார இறுதியினுள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ சங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தமையுடன், அவர்களின் தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கைக்குண்டுகளுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுவினரின் செயற்பாடுகள் நாட்டில் அதிகரித்துள்ளனவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இப்போதே உடனடியாக எந்தவொரு முடிவுக்குவும் வந்துவிட முடியாது. அத்தோடு, இந்தச் சம்பவத்தைக் காரணம் காட்டி நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன என்றும் கூற முடியாது.

விசாரணைகளின் முழுமையான முடிவிலேயே சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வார இறுதியினுள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் விசாரணைக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயலுக்கான உண்மையான காரணம் விரைவில் வெளிக்கொணரப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

39 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

35 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

27 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் படு கொ*லைக்கு சர்வதேச விசாரணையே தீர்வு.!

“தமிழினப் படு கொலைக்கு கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள் செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது…

43 0 0