உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை மல்வத்தையில் அமைப்பதே சிறந்தது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
94 பார்வைகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட மருத்துவப் பீட அமைவு மற்றும் கற்பித்தல் வைத்தியசாலைத் தேர்வு தொடர்பில் இலங்கை உலமா கட்சி மிக முக்கிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

இது குறித்து இலங்கை உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“மூன்று சமூகங்களுக்கும் பொருத்தமான மையப் பகுதியான மல்வத்தையில் மருத்துவ பீடத்தை அமைத்து, அம்பாறை பொது வைத்தியசாலையை அதன் கற்பித்தல் (மருத்துவப் படிப்புக்கான) வைத்தியசாலையாக இணைப்பதே மிகவும் பொருத்தமான தீர்வாகும். இன ரீதியான முரண்பாடுகள் இன்றி அனைத்து சமூக மாணவர்களும் பயன்பெறும் வகையிலும், நிர்வாக ரீதியான வசதிகளைக் கருத்திற் கொண்டும் இந்நடவடிக்கை அமைய வேண்டும்.”

“தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவப் பீடத்தை உருவாக்கும் முயற்சியில் முதன்முதலில் இறங்கியவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ஆவார். பின்னர் அரசாங்கத்தில் நிதி இல்லை எனக் கூறி அவ்விஷயம் கைவிடப்பட்டபோது, அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் அதற்குரிய நிதியைப் பெற்றுத்தர எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.”

தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பயிற்சி வைத்தியசாலையாகக் கல்முனை ஆதார வைத்தியசாலையை அமைக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூறுகிறார்.

ஆனால், இன ரீதியான முரண்பாடுகள் நிறைந்த சூழலில் கல்முனை ஆதார வைத்தியசாலை இதற்குப் பொருத்தமானதாக இருக்காது.

தென்கிழக்கில் பயிலும் முஸ்லிம் மாணவிகளின் ஆடைக் கலாச்சாரத்திற்குக்கூட அங்கு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கல்முனை ஆதார வைத்தியசாலையைப் பயிற்சி வைத்தியசாலையாக அமைப்பது சாத்தியமற்றது” என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசைக் கவிழ்க்க மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தாதீர்!

நாட்டில் தற்போது அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களின் பின்னணியில், சில மதத் தலைவர்கள் தவறான நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றனர் என்று தோட்டக் கட்டமைப்பு மற்றும் சமூக…

79 0 0
இலங்கை செய்திகள்

பிக்குகள் துறவற ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும்! – மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

பௌத்த பிக்குகள் தங்களது துறவற ஒழுக்கத்தைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து, பௌத்த சாசனத்தின் கண்ணியத்தையும் மகா சங்கத்தினருக்குச் சமூகத்தில் வழங்கப்படும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதான பௌத்த…

84 0 0
இலங்கை செய்திகள்

மகாநாயக்க தேரர்களின் தலையீட்டினால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது விகாரமகாதேவி பூங்கா போராட்டம்!

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கடந்த 10 நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த, சிறையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் சத்தியாக்கிரகப்…

89 0 0
இலங்கை செய்திகள்

அடக்குமுறையைக் கையாண்டால் கொடூரமான எதிர்வினை வெடிக்கும் : சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

அரசு ஜனநாயக வரம்புகளுக்குள் செயற்பட்டால் மக்களிடமிருந்தும் ஜனநாயக ரீதியான பதில்களே கிடைக்கும் என்றும், அதற்கு மாறாக அடக்குமுறைகளைப் பயன்படுத்தினால் கொடூரமான எதிர்வினைகளே உருவாகும் என்றும் ஐக்கிய குடியரசு…

94 0 0