உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜனாதிபதியின் செயலாளரை நேரில் சந்தித்து மலையக இந்து குருமார்கள் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
167 பார்வைகள்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவுக்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மலையகப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களின் நிர்வாக நடவடிக்கைகள், அறநெறிப் பாடசாலைகளை நடத்திச் செல்லல், குருமார்களின் தேவைகள், அத்துடன் ஆலய காணிகள் மற்றும் மதத் தலங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இலங்கை மலையக இந்து குருமார்கள் ஒன்றியத்தால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதற்கு அரசின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மலையக இந்து குருமார்கள் வாழும் பகுதிகளிலுள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள் உள்ளிட்ட இந்து குருமார் ஒன்றியத்தின் மதத் தலைவர்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) கே.பி. யோகசந்திர, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம் மற்றும் பொலிஸ்) எம்.எஸ்.பி. சூரியப்பெரும, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹால், இந்து சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை. அனிருத்தனன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழக பேச்சுப் போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் இரண்டாமிடம்.!

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையால் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜெரோம் ஜொய்சன் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்.…

97 0 0
இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் உப்பளத் திட்டத்தை கைவிடுங்கள்.!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் முன்மொழியப்பட்ட உப்பளத் திட்டத்தினை கைவிடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை கடிதம் அனுப்பிவைத்துள்ளார். இது…

88 0 0
இலங்கை செய்திகள்

வேகமாகப் பரவும் மர்மத் தாவரம்; கட்டுப்படுத்துவது அவசியம் என எச்சரிக்கை.!

நயினாதீவில் ஆலங்குளத்தை அண்டிய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வேகமாகப் பரவி வரும் இனங்காணப்படாத தாவரம், மண்வளத்தை மேம்படுத்தும் நன்மைகளைக் கொண்டிருந்தாலும், கட்டுப்பாடின்றிப் பரவினால் விவசாய நிலங்களையும்…

90 0 0
இலங்கை செய்திகள்

கொக்குவில் இந்துக் கல்லூரியில் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் கொ**ல்லப்பட்டவர்களின் நினைவேந்தல்.!

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது. கொக்குவில் இந்துக்…

88 0 0