உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்.!

இலங்கை செய்திகள் 43 நிமிடங்கள் முன்
79 பார்வைகள்

நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாமல் ராஜபக்ஷ இந்த நாட்டின் ஒரு சாதாரண பிரஜையே தவிர, அவர் எந்தவிதத்திலும் விசேடமான நபர் அல்லர் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், முன்பிருந்த ஊழல் மற்றும் மோசடிகளுடன் அவருக்குத் தொடர்பு இருக்குமாயின், அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் இடம்பெறும் தருணத்தில் இக்கைது இடம்பெற்றதால், இது அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பிரதி அமைச்சர் முற்றாக நிராகரித்தார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சுயாதீன நிறுவனங்கள் தமது விசாரணைகளின் முடிவுகளுக்கு அமைவாகவே நபர்களை அழைப்பதும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் வழக்கம் என்றும், இத்தகைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் குறித்த சட்டப்பூர்வ கைதுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் என்ற ரீதியில் சட்ட அமுலாக்க நிறுவனங்களை பலப்படுத்துவதையே தாம் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், மக்கள் ஆணையுடன் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும், மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் மக்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முகநூல் களியாட்ட நிகழ்வு; 41 பேர் கைது.!

தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட முகநூல் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ்…

76 0 0
இலங்கை செய்திகள்

தந்தையை கொ*லை செய்த மகன்.!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார். இருவருக்கும்…

79 0 0
இலங்கை செய்திகள்

செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார்…

54 0 0
இலங்கை செய்திகள்

கற்பிட்டியில் கரை ஒதுங்கிய இந்திய மீனவரின் படகு.!

இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகு ஒன்று புத்தளம், கற்பிட்டிப் பிரதேசத்தில் நேற்றுக் கரை ஒதுங்கியுள்ளது. இந்திய மீனவர்களின் பயன்பாட்டில் உள்ள படகு ஒன்றே இயந்திரமின்றி இவ்வாறு கரை…

67 0 0