உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வாதிகாரப் பாதையில் பயணித்து ஜனநாயகத்தை மரணப் படுக்கைக்கு கொண்டு செல்கின்றது அரசு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
115 பார்வைகள்

திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை தேர்தல் தொகுதி, லுனுகம்வெஹர புதிய நகரில் விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
“மாறுபட்ட அரசே இன்று நாட்டை ஆட்சி செய்து வருகின்றது. சர்வாதிகார, எதேச்சதிகார அரசாகவே இந்த அரசு காணப்படுகின்றது. அவ்வாறே ஜனநாயகத்தை மரணப் படுக்கைக்குக் கொண்டு செல்லும் அரசாகவும் இது திகழ்கின்றது. தற்சமயம் இந்தப் பிரஜைகளின் பங்களிப்பைக் குறைக்கும் தேசியத் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து, ஜனநாயகத்துக்கான வெளியைச் சுருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன் ஆரம்பம் இளைஞர் மன்றத் தேர்தல் ஊடாக நடந்து, பின்னர் சிவில் பாதுகாப்பு குழுக்கள் வரை சென்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது 22 ஆவது அரசமைப்புத் திருத்தம் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, ஜனநாயகப் பாரம்பரியங்கள் அனைத்தையும் நாசமாக்கி, தனிவழியில் எல்லா விடயங்களையும் செய்துகொள்ள இந்த அரசு முற்பட்டு வருகின்றது.

சர்வாதிகாரப் போக்கில், தனிவழியில் செயற்படும் இந்த அரசு எடுக்கும் தீர்மானங்கள் காரணமாகவே நாடே வீழ்ச்சியடைந்துள்ளது. தனிக்கட்சி நாட்டை ஆட்சி செய்வதே ஜனாதிபதிக்கு தற்போதுள்ள ஒரே நோக்கமாகக் காணப்படுகின்றது. முழு அரசும் அரச இயந்திரமும் ஒரு கட்சியினது உத்தரவுகளுக்கு இணங்கச் செயற்பட இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காகவே 22 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளனர்.

எதிர்க்கட்சியாக இருந்தவேளை மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதாகவும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில் எரிபொருளைப் பெற்றுத் தருவதாகவும், இளைஞர் தலைமுறைக்கு 12 இலட்சத்துக்கு விட்ஸ் ரக காரைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தித் தருவதாகவும், நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் நிலையான விலையைச் சட்ட ரீதியாக ஆக்கித் தருவதாகவும் பிரஸ்தாபித்தனர். ஆனால், இன்று வரை இதில் எதையுமே செய்யவில்லை. நாட்டை சர்வாதிகார ஆட்சி நோக்கியே அரசு நகர்த்திச் செல்கின்றது.

எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளைச் சொற்ப தொகையில் குறைத்துவிட்டு ஊடகக் காண்பிப்புகளையே இவர்கள் செய்து வருகின்றனர். தமக்கு வாக்களித்த மக்கள் துன்பப்பட வேண்டும் என்பதே இந்த மாறுபட்ட அரசின் ஆசையாகக் காணப்படுகின்றது.

விவசாயியின் மகன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று சுழற்சி முறை விவசாயத்தைக்கூட தடை செய்து வருகின்றார். இதன் மூலம் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்செய்கை, தோட்டப் பயிர்கள், மரக்கறி மற்றும் பழங்கள், ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை உள்ளிட்ட ஒட்டுமொத்த விவசாயமும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஆகியவை இவர்களிடம் இருப்பதால் அரசு தங்களை அதிகாரம் படைத்தோராக நினைத்துக்கொண்டிருக்கின்றது.

69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்கள் வீதியில் இறங்கியமையாலேயே அவர் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. 2019 இலும் 2024 இலும் மக்கள் ஏமாந்தனர். ஆகவே, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வீதியில் இறங்கத் தயாராகுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் உ**யிரிழந்த நிலையில் ஒருவர் மீட்பு.!

யாழ்ப்பாணம் கொட்டடி கடற்கரைப் பகுதியில் இன்று (23) அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குறித்த சடலத்தைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக…

141 0 0
இலங்கை செய்திகள்

செத்தல் மிளகாயின் விலை அதிகரிக்கும் அபாயம்.!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் செத்தல்…

127 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கிய ஐவர்; ஒருவர் உ**யிரிழப்பு.!

பெந்தோட்டை கடலில் மூழ்கி ஐந்து இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் நேற்று (22) பிற்பகல் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால்…

125 0 0
இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி இருவர் உ**யிரிழப்பு.!

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் இன்றிரவு பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் இந்த…

126 0 0