உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

22ஆவது திருத்தத்தால் ஜனநாயகம் சீரழிகின்றது.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
80 பார்வைகள்

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்பட்டு, நீதித்துறை அவமதிக்கப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கட்சித் தலைமையகங்களின் விருப்பத்துக்கு ஏற்ப நியமனங்கள் வழங்கும் போக்கு உருவாகியுள்ளது என்றும், நாட்டின் பொருளாதாரம் மாத்திரமின்றி ஜனநாயகமும் சமூகமும் சுருங்கிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சிவில் அமைப்புகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கட்சித் தலைமையகங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இளைஞர் சங்கங்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களை நியமிப்பது போன்ற மக்கள் உரிமைகள் மீறப்படும் காலம் உருவாகியுள்ளது.

22ஆவது திருத்தத்தின் மூலமாக இந்த நிலை மேலும் தீவிரமடைந்து நீதி வழங்கும் செயல்முறையின் மீது செல்வாக்கு செலுத்தப்படுகின்றது.

நாட்டின் அபிவிருத்தி மற்றும் பேரிடர் காலங்களில் சிவில் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பிரதான பங்குதாரர்களாகச் செயற்படுகின்றன.

அரச இயந்திரத்தை விட மக்கள் அவற்றை அதிகமாக நம்புவதால், சர்வதேச தரத்துக்கு ஏற்ப முறைப்படுத்தல் நடக்க வேண்டுமே தவிர பலவந்தமாக அவற்றை முடக்கக் கூடாது.

முறையை மாற்றப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களைத் தமது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதோடு அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

தரமான விதை நெல், உரங்கள், கிருமிநாசினிகள் இன்றித் தவிப்பதோடு, யானை – மனித மோதல்களால் பாதிப்பு ஏற்படும் சூழலில் மேலதிக பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளவும் அரசு அனுமதி மறுத்து வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் நீதிபதிகளைப் பாதுகாத்தது. ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவியிலிருந்து நீக்கிய தரப்பு நாங்கள் அல்லர்.

மாகாண சபைத் தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தபோது அவர்களைத் தெரிவுக் குழுவுக்குக் கொண்டு செல்வதை எதிர்க்கட்சியாக நாமே எதிர்த்தோம்.

தற்சமயம் உருவாகியுள்ள எல் நினோ மற்றும் லா நினோ காலநிலை நிலைமைகளுக்கு அரசால் மாத்திரம் தீர்வு காண முடியாது என்பதால், சிவில் சமூகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்கும் அவசியம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

130 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

112 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

111 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0