உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கோலாகலமாக நடைபெற்ற கடலோர வேடர்களின் பாரம்பரியத் தேன் பூஜை.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
59 பார்வைகள்

கிழக்குக் கரையில் வசிக்கும் தமிழ் மொழியைப் பேசும் கடலோர வேடர் சமுதாய மக்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சேருவில ஸ்ரீ லலாட தாது மகா பெரஹரா விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரியத் தேன் பூஜை சேருவில மங்கள ராஜமகா விகாரையில் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கடலோர வேடர்களின் தலைவரான நடராஜா கனகரத்தினம் தலைமையிலான பழங்குடியின மக்கள் பக்தி சிரத்தையுடன் எடுத்துவந்த தேன் குடம், சேருவில மங்கள ராஜமகா விகாராதிபதி வணக்கத்திற்குரிய அலுதெனியே சுபோதி நயினாக தேரரிடம் சடங்கு பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

பழங்குடியின மக்கள் மங்கள மகா ஸ்தூபியை வலம் வந்து வழிபட்டதைத் தொடர்ந்து தேன் பூஜை இடம்பெற்றது.

இப் பூஜையானது பழங்குடியின மக்களுக்கு இலகுவில் புரியும் வகையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுவதற்காக விகாராதிபதி தேரரால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவின் ஆலோசனையின் பேரில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் நிறைவில், விகாராதிபதி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் பிரீத் நூல் வழங்கி கடலோர வேடர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

சாதி, மதம் மற்றும் மொழி காரணங்களால் சமூகங்களால் ஓரங்கட்டப்பட்ட ஒரு தனித்துவமான குழுவினரான இவர்கள், வெருகல் மற்றும் மூதூர் போன்ற பகுதிகளில் உள்ள 27 கிராமங்களில் பரந்து வாழ்கின்றனர்.

சேருவில பெரஹராவில் தங்களின் பாரம்பரிய நடனங்களையும் கலைகளையும் வெளிப்படுத்தும் இவர்கள், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கும் சேருவில விகாராதிபதி தேரருடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

36 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0