உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

ஏனைய அரசியல் கட்சிகளை அழித்து சர்வாதிகாரப் பாதையில் செல்ல முற்படுகின்றது ஜே.வி.பி. அரசு.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
77 பார்வைகள்

அவசர அவசரமாக அரசமைப்புச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்து நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தனது தலைமையகத்துக்குள் முடக்கி, ஏனைய அரசியல் கட்சிகளை அழித்து சர்வாதிகாரப் பாதையில் செல்ல ஜே.வி.பி. அரசு முற்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டினார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
“ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், மகாநாயக்க தேரர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று எச்சரித்துள்ள நிலையில், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முற்படாத அரசு, அரசமைப்புச் சீர்திருத்தம் மூலம் அனைத்து அதிகாரங்களையும் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்துக்குள் முடக்கி ஏனைய கட்சிகளை அழிக்க முயல்கின்றது.

பொருளாதாரம் சீரடைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளன. எரிபொருள் விலையைக் குறைப்பதாகக் கூறிவிட்டு இன்று லீற்றருக்கு 100 ரூபாவுக்கும் அதிகமாக அரசு உயர்த்தியுள்ளது.

கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களைப் பற்றியிருந்த ‘அதிகார போதை’ நோயே இன்று அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசையும் பற்றியுள்ளது.

அமைச்சர்கள் வீதிச் சந்தைகளுக்குச் சென்று மக்களிடம் பேசிப் பார்த்தால் உண்மை நிலை புரியும்.

வடக்கு, கிழக்கு மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைப் பெற்ற அரசு, ஜனநாயகத்தின் பிரதான அங்கமான மாகாண சபைத் தேர்தலை நடத்த எந்தவொரு விருப்பமும் இன்றி மக்களை ஏமாற்றி வருகின்றது. மன்னார் எண்ணெய் அகழ்வு போன்ற கதைகளைப் பரப்புவது தேர்தல்களைக் காலந்தாழ்த்தும் ஒரு முயற்சியே.

எது எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி கிராம மட்டத்தில் அமைதியான முறையில் மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுத்து, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக மக்களை அணிதிரட்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

117 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

98 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

106 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

118 0 0