உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

தேர்தல் ஒன்று வந்தால் அரசு தோற்பது உறுதி.!

48 பார்வைகள்

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசு தோல்வியடைவது நிச்சயம் என்றும், வரவிருக்கும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து ஒரே பொதுப் பட்டியலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளன என்றும் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,
“மாகாண சபைத் தேர்தலோ அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலோ எது நடத்தப்பட்டாலும் அரசு அதில் தோல்வியடைவது உறுதி. இந்தத் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே அரசு தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாகக் காலத்தைக் கடத்தி வருகின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் வரை அரசு எந்தவொரு தேர்தலையும் நடத்தப் போவதில்லை என்பதே எனது கணிப்பு.

எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், தேர்தல் என்று வரும்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கைகோர்க்கும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே சுமுகமான தீர்மானத்துக்கு வந்துள்ளன.

அதற்கமைய, வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே பொதுப் பட்டியலில் களமிறக்கப்படுவார்கள்.

போட்டியிடும் தேர்தல் சின்னம் எது என்பது ஒரு சிறிய விவகாரமே தவிர அது ஒருபோதும் பிளவை ஏற்படுத்தாது. இரு பிரதான சக்திகளும் ஒன்றிணைவதே இங்கு முதன்மையானது என்பதால் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள இரண்டும் ஒரே அணியாக இணைந்து செயற்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய…

36 0 0
இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

18 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

48 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

69 0 0